பிரதமர் மகிந்த யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!!

 


பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் இரு பாரிய குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்க வரும் 6ம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (பளை) பகுதியில் 24000m3 மூலம் 3 இலட்சம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தாழையடி SWRO உப்புநீக்கும் ஆலைபிரிவானது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்த திட்டமானது 5000 பயனாளிகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும் என கூறப்படுகின்றது.

 யாழ்.நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கும் என்றும், அதில் ஒரு இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP ( Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project) இன் கீழ் 284 கி.மீக்கு நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் யாழ்.நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO திட்டமானது 2023 க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம் பயனாளிகளுக்கு சுத்தமான நீர் வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.