கொவிட் நோயாளர்களுக்கான ஒட்சிசன் - சுகாதார அமைச்சர் ஆலோசனை!

 


நாடு பூராகவும் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசன் விநியோகம் தொடர்பாக நாள்தோறும் கண்காணித்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


ஒட்சிசன் தேவைப்படும் அனைத்து நோயாளர்களுக்கும் தட்டுப்பாடு இன்றி ஒட்சிசனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், ஒட்சிசன் இன்மையால் நோயாளர்கள் இறப்பதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாளாந்தம் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.