மாரடைப்பால் பிக் பாஸ் பட்டம் வென்ற பிரபலம் உயிரிழப்பு!

 


இந்தி பிக் பாஸ் 13-வது சீசனில் பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

40 வயதான நடிகர் சித்தார்த் சுக்லா இந்தி பிக் பாஸ் 13-வது சீசன் நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை வென்றவர் . அத்துடன் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா,2 சினிமா படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் மரணமடைந்தார்.

2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்த சித்தார்த் சுக்லா, 2014-ல் பாலிவுட்டில் அறிமுகமானார். இதெவேளை சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.