காணாமல் ஆக்கப்பட்ட கண்மணிகள்!!


உறவோடு சேர்ந்து வந்த எம்

சொந்தங்கள்
ஊர் கூடி நிற்க ஒப்படைத்த
வைரங்கள்
கண்ணுக்குள் நாம் வைத்து
காத்து வந்த கண்மணிகள்
சர்வதேசத்தை நம்பி நாங்கள் கையளித்த உறவுகள்
காலங்கள் பல கடந்தும்
காணமுடியாத பந்தங்கள்
எங்கள் கண்ணீர்களுக்கு இன்னும்
வரவில்லை முடிவுகள்
நினைவுகளால் தினம்
பரிதவிக்கும் நெஞ்சங்கள்
நிறைகிறது விடை அற்ற
பல நூறு வினாக்கள்
ஒரு முறை பார்த்திட
துடிதுடிக்கும் மனங்கள்
வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள்
என்று தீரும் இந்த ஏக்கங்கள்...?
என்று தீரும் இந்த வலிகள்...?
என்று நிற்கும் வழிகின்ற கண்ணீர்கள்...?
என்று மலரும் முகங்களில் புன்னகைகள்...?
அருந்தமிழ்
30/08/2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.