ஆயிரத்து 850 கொரோனா சடலங்கள் மட்டக்களப்பில் அடக்கம்!!

 


மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 2 ஆயிரத்து 850 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை. இந்த பொது மயானத்திலே சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன.

இதனை எமது சபை பொறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இராணுவத்தினர்,சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.

இதுவரையில் 2850 சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளாந்தம் அதிகமான சடலங்கள் வருகின்றது” என அவர் தெரிவித்தார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.