சீன உரத்தில் அபாயகரமான பக்றீரியா!!

 


சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரியில் அபாயம் மிக்க பக்றீரியா இனங்காணப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய உரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இணையவழியூடாக நடைபெற்றபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியில் அபாயம் மிக்க பக்றீரியா இனங்காணப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும். முத்திரையிடப்படாத குறித்த மாதிரியில் இவ்வாறான அபாயம் மிக்க பற்றீரியா இனங்காணப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தவிர மருந்து மற்றும் உரம் போன்ற எந்தவொரு பொருளும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும்போது விலைமனு கோரலுக்கு முன்னர் மாதிரிகள் பெறப்படும் அதேவேளை, நாட்டுக்கு அவை கொண்டு வரப்பட்டதன் பின்னரும் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவது வழமையாகும் எனவும் அவர் கூறினார்.

எனவே நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பக்றீரியா அல்லது உயிரிகள் உள்ளடங்கிய உரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படமாட்டாது என அரசாங்கம் உறுதியளிக்கிறதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.