தொற்றிற்குள்ளான மனைவி கணவனால் கொலை!!

 


பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா தொற்றிற்குள்ளான மனைவியை கொலை செய்த நிலையில், மனைவி தொற்றினால் உயிரிழந்ததாக கூறி நாடகம் ஆடிய கணவன் பொலிஸாரால் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

மனைவியை கொன்று, சொத்துக்களை கைப்பற்றிய பின்னர், கள்ளக்காதலியை திருமணம் செய்ய திட்டமிட்ட வர்த்தகராக குறித்த கணவர் தற்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சம்பவத்தில் 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தம்பதிக்கு 13, 6 வயதான பிள்ளைகள் உள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குறித்த பெண், வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15ஆம் திகதி இரவு, பெண்ணின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய கணவன், அவர் படுக்கையில் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியர்கள் பிசிஆர் சோதனைக்கு பரிந்துரைத்த நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று மீள உறுதியானது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவனின் நடத்தையில், இறந்தவரின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது சகோதரியின் சடலத்தின் கழுத்து பகுதியில் நகக்கீறல்கள் காணப்பட்டதாகவும், சட்டை கொலரினால் அதை கணவன் மறைத்ததாகவும் , பொலிசாரிடம் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த கல்கிசை நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் பரிசோதனையில் அவர் கொல்லப்பட்டமை தெரிய வந்தது. சம்பவம் தொடர்பில் கணவனான வர்த்தகரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதியதில், தலையணையினால் மனைவியின் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்வதற்காக மனைவியை கொலை செய்ததையும் அவர் ஏற்றுக்கொண்டதுடன் , மனைவியின் பெயரிலுள்ள சொத்துக்களை கைப்பற்றிய பின்னர் அவர் மறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.