வெளிநாடொன்றிற்கு இலங்கையிலிருந்து பிரேதப்பெட்டிகள் ஏற்றுமதி!!

 


இலங்கையில் தற்பொழுது தயாரிக்கப்படும் பயன்படுத்தப்படும் காட்போட் பிரேதப் பெட்டிகள் வெளிநாட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இதன்படி 1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் நேற்று வியட்நாமுக்கு அனுப்பப்பட்டன.

அண்மையில் தெஹிவளை -மவுண்ட்லவெனியா மாநகர சபையால் அறிமுகம் செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு நட்புறவான மலிவான காட்போட் பிரேதப் பெட்டிகள் இப்போது வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இச்செயற்றிட்டம் இலங்கையிலுள்ள வியட்நாமியத் தூதரக அதிகாரிகள், வியட்நாமிலுள்ள இலங்கை சங்கநாயகத் தேரர் மற்றும் தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் தலைவர் ஆகியோரின் கலந்துரை யாடலின் விளைவாக இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த காட்போட் பிரேதப் பெட்டிகள் நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என இந்தக் கண்டுபிடிப்பின் நிறுவுனர் பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.