2 ஆயிரத்து 842 பேருக்கு புதிதாக இலங்கையில் தொற்று!!

 
இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4 இலட்சத்து 80ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் மேலும் ஆயிரத்து 512 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4 இலட்சத்து 9ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 59ஆயிரத்து 855 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.