மணிக்கொழுக்கட்டை செய்யும் முறை!!

 


தேவையான பொருட்கள் :

அரிசி - 1/2 கப்

எண்ணெய் - 1 tsp
உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - 1 கப்

தாளிப்பதற்கானவை

எண்ணெய் - 1 tsp
கடுகு - 1 tsp
பெருங்காயத்தூள் - சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு - தே.அளவு

செய்முறை :

அரிசியை 4-5 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் அதை வடிகட்டி தரையில் உலர்த்தி தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் அரிசி மாவு ரெடி.

அடுத்ததாக சட்டி வைத்து தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

பின் அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள். தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரை கிளறுங்கள்.

பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். அதை இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.

வெந்ததும் அதை ஆற விடுங்கள்.

தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் கொழுக்கட்டை உருண்டைகளை கொட்டி கலந்துவிடுங்கள்.

அவ்வளவுதான்.. விநாயகர் சதுர்த்தி படையலுக்கு உகந்த மணிக்கொழுக்கட்டை தயார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.