பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!


 யாழில் செபம் சொல்லிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வடமராட்சி - அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடி யைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ் மணி (வயது- 51) என்பவரே இவ்வாறு உயிரிழந் தார். உயிரிழந்த பெண் கோவளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்தார்.

இதனையடுத்து அவரை உடனடியாக பருத்தித் துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் அவரின் உடலில் இருந்து பெறப் பட்ட மாதிரிகள் நேற்று பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட போது உயிரிழந்தவருக்கு தொற்று இருந்தமை உறுதிப்படுத் தப்பட்டது.

இதனையடுத்து பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.