பத்தனையில் ஆற்றில் மிதந்தது ஆணின் சடலம்!

 


டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.