யாழில் பாரிய தீ விபத்து!

 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அண்மையாக உள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.


இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.

வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு அங்கு வசிக்கும் பெண் ஆலயம் சென்று திரும்பிய நிலையில் வீட்டிக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்புப் படைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.