ஹெரோயினுடன் 6 பேர் கைது

 


மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேரை நேற்று (02) நள்ளிரவில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காத்தான்குடி பகுதிகளில் உள்ள வீடு ஒன்றினை முற்றுகையிட்டபோது அதில் 6 பேரை ஒரு கிராம் 10 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை இன்று​ெமட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தொடர்ச்சியாக நாளாந்தம் போதைப்பொருளுடன் 2 பேருக்கு மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.