ஜி-20 சர்வமத மாநாடு- பிரதமர் மஹிந்த சிறப்புரை!!

 


இத்தாலி- போலோக்னாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார்.

குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் இத்தாலி-  போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

இதன்போது பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

அதாவது, மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு பிரதமருக்கு கிடைத்த அழைப்பினை ஏற்றே, அவர் குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில் இம்முறை நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாடானது ‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில்  இடம்பெறுகின்றது.

மேலும் இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.