மேலும் 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி!!


 இலங்கையில் நேற்றையதினம் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 521 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 70 ஆயிரத்து 260 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 346 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

அதேநேரம், 5 ஆயிரத்து 116 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஆயிரத்து 366 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

அதேவேளை 17 ஆயிரத்து 311 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும்  29 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸும் செலுத்தப்பட்டது.

11 ஆயிரத்து 936 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 157 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.