மஹிந்த அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம்!

 


நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, விரைவில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் விசேட கோரிக்கையின் பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அவர் அமெரிக்கத் தூதுவராக நியமனம் பெறவுள்ளார்.

இதேவேளை இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா புறப்படமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவிடம் நீண்டநேரம் பேச்சு நடத்தியிருக்கின்றார் என அறியமுடிகின்றது.

இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமை பேரவையில் சவாலாக உள்ள நிலையில் அதனைக் கையாண்ட முக்கிய இராஜதந்திரியாக உள்ள மஹிந்த சமரசிங்கவுக்கு மீண்டும் இதற்கான பொறுப்பு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.