தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை

 


பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.