காதலரை கரம் பிடித்த நாயகி சீரியல் துணைநடிகை!!

 


கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர் நாயகி. இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக நடிகை விஜயலெட்சுமியும் அதன் பின்னர் வித்யா பிரதீப்பும் நடித்திருந்தனர். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த தொடரில் நாயகன் திருவுக்கு தங்கையாக அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீபா. தனது இயல்பான நடிப்பாலும் பேச்சாலும் தான் நடித்த வில்லி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். நாயகி சீரியலுக்கு பிறகு அவர் எதிலும் தற்போது நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவரது திருமணம் கோலகலமாக நடைபெற்றுள்ளது. சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உறவினர்கள் சூழ தனது காதலரை கரம் பிடித்துள்ளார் பிரதீபா. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.