வெயில் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும் பன்னீர் றோஜா

 


சருமத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் சருமத்திற்கும் பலநன்மைகளை அளிக்கக்கூடியது றோஜா மலர். இதன் இதழ்களில் அடங்கியுள்ள விற்றமின் C சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின் அழகை பராமரிக்க றோஜா இதழ்ழை பயன்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். றோஜா இதழ்களை அரைத்து தடவினால் சருமம் மென்மையாகும். குளியல் பொடியிலும் அரைத்த றோஜா இதழ்களை சேர்க்கலாம். வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு தே கரண்டி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்கும். கறுப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் றோஜா ஒரு கரண்டி, தேன் அரைக் கரண்டி கலந்து உதடுகளின் மேல் பூசி வரலாம். அரைத்த பன்னீர் றோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.