கொவிட் நோயாளர்களுக்கான குறுஞ்செய்தி சேவை


 கொவிட் நோயாளர்களுக்கான குறுஞ்செய்தி சேவை தென் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொவிட் - 19 நோயாளர்களை 1904 எனும் தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக சிகிச்சைக்காக அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து பராமரிக்கும் வேலைத்திட்டம் நேற்று (02) முதல் தென் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் அவர்களை வீடுகளில் வைத்து பராமரித்தல் மூன்று முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

கொவிட் தொற்று ஏற்பட்ட நிலையில் சுவாசக் கோளாறு மற்றும் அதனுடன் தொடர்பான சிக்கல் நிலைமைகளுக்கு உள்ளாகும் நோயாளர்கள் துரிதமாக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

ஏனைய நோய் அறிகுறிகள் கொண்ட நோயாளர்கள் பொருத்தமான சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

நோய் அறிகுறியற்ற நோயாளர்கள் வீட்டினுள் வைத்து பராமரிக்கப்படுவர்.

நோய் தொற்றுக்குள்ளான தென் மாகாணத்தில் வசிக்கும் மக்கள் 1904 எனும் இலக்கத்திற்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்ப வேண்டிய முறை பின்வருமாறு,

01. சுவாசக் கோளாறு மற்றும் அதனுடன் தொடர்பான சிக்கல் நிலைமைகளுக்கு உள்ளாகும் நோயாளர்கள் A (இடைவெளி) வயது (இடைவெளி) பிறந்த திகதி (இடைவெளி) விலாசம்

02. காய்ச்சல் மற்றும் ஏனைய நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்கள் - B (இடைவெளி) வயது (இடைவெளி) பிறந்த திகதி (இடைவெளி) விலாசம்

03. எவ்வித நோய் அறிகுறியுமற்ற நோயாளர்கள் - C (இடைவெளி) வயது (இடைவெளி) பிறந்த திகதி (இடைவெளி) விலாசம்


இம்மாதம் 19ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டமானது மேல் மாகாணத்தில் தொடர்ந்தும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.