போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்

 


இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு மீன்பிடி படகிலிருந்து பெருந்தொகையான ஹெரோயினை கைப்பற்றிய கடற்படையினர், அதில் பயணித்த 7 பேரை கைது செய்திருந்தனர்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த ஈரானுக்கு சொந்தமானதென கூறப்படும் குறித்த வெளிநாட்டு மீன்பிடி படகு, தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, கைப்பற்ற ஹெரோயின் போதைப்பொருளின் நிறை சுமார் 301 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களில் நால்வர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும் தெரியவந்துள்ளது.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கடல் பரப்பில் வைத்து குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, மேலதிக விசாரணைகளுக்காக, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு காரியாலயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.