மற்றொரு சின்னத்திரை நடிகை தற்கொலை!!
சின்னத்திரை சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை செய்துக் கொண்டது கன்னட திரையுலகில் மீண்டுமொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை உயிரிழந்தமை தொடர்பிலான ஆரம்ப விசாரணையில், நடிகை தனது அறையில் தொங்குவதை பார்த்து, கதவை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார், அவரது அடையாளங்களில் ஒன்றாக தனது காலில் சௌஜன்யா பச்சை குத்தியிருப்பதை குறிப்பிட்டனர்.
நடிகை சௌஜன்யா தனிப்பட்ட வாழ்க்கையில் செளஜன்யா ஏதேனும் கஷ்டங்களை கொண்டிருந்தாரா என கண்டுபிடிக்க காவல்துறை முயற்சிப்பதாகவும், இதுகுறித்து குடும்பத்தினரிடமும், சக ஊழியர்களிடமும் விசாரித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு சௌஜன்யாவின் ஒரு மரணக்குறிப்பையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தன்னுடைய இந்த முடிவுக்கு வேறு யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றும், அவரது தற்கொலைக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செளஜன்யா தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன் எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றாலும், தான் வாழ்க்கையில் எதிர்கொண்டவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செளஜன்யா ஒரு சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஓரிரு படங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில் , அவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan
கருத்துகள் இல்லை