விடுதலைக்காக ஆகுதியாகிய ஆத்மாக்களின் மீது சபதமெடுக்கின்றோம் எமது பயணம் தொடரும் - க.சுகாஷ்
இணுவிலை பிறப்பிடமாகவும். யேர்மனி சோலிங்கனை வதிவிடம் . ஆகவும் . கொண்ட ஆறுமுகம் தர்மலிங்கம் .எ..தர்மா அண்ணா இன் று 25.09.2021சனிகிழமை இறைவனடி சேர்ந்து விட்டார். அண்ணா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம்.
யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களை நினைவேந்த முற்பட்டபோது கைது செய்யப்பட்ட எமது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், யாழ். மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் ராஜீவ்காந்த் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர் தங்கராஜா ராஜசிறீகாந்தன் ஆகியோரின் விடுதலைக்காக அக்கறையோடு செயற்பட்ட அனைவருக்கும் எமது சிரந்தாழ்த்திய நன்றிகள் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
விசேடமாக கைது இடம்பெற்றதிலிருந்து பிணையில் விடுவிக்கும்வரை களத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றி ஆதரவுக்கரம் நீட்டிய ஊடக உறவுகள், சட்டவிரோத கைதை கண்டித்து அறிக்கைகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைத்தள உறவுகள், நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
நீங்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாக எமது அரசியல் பயணம் தொடருமென்று இன விடுதலைக்காக ஆகுதியாகிய ஆத்மாக்களின் மீது சபதமெடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை