காடைக் குழம்பு செய்முறை!!

 


தேவையான பொருட்கள்:


1. காடை - 2 

2. பெரிய வெங்காயம் -1 

3. தக்காளி -1

4. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி

5. மிளகுத்தூள் -1தேக்கரண்டி

6. மல்லித்தூள் -1 தேக்கரண்டி

7. மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி

8. கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி

9. உப்பு -தேவையான அளவு

10. கருவேப்பிலை - 1 கொத்து

அரைக்க : (1)

11. சின்ன வெங்காயம் -10 எண்ணம்

12. பச்சை மிளகாய் -1 எண்ணம்

13. மல்லித் தழை-சிறிது

அரைக்க : (2)

14. தேங்காய் -3துண்டுகள்

15. சோம்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

16. எண்ணெய் - தேவையான அளவு

17. பட்டை - 1

18. கிராம்பு - 1 

19. பிரிஞ்சி இலை -1 

20. இஞ்சி, பூண்டு விழுது -1 தேக்கரண்டி.

செய்முறை:

1. அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து தனித்தனியாக எடுத்து வைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும். தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.

3. அதனுடன் வெங்காயம், சேர்த்துப் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4. பின் அதனுடன் தூள் வகைகள், காடை துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

5. அத்துடன் தேவையான அளவு நீர் விட்டு மூடி வேக விடவும்.

6. கறி நன்றாக வெந்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.