மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு பிரித்தானியா!

  

தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை 2009 ஆம் ஆண்டு மே 18 வரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு இன்று லன்டனில் இடம்பெற்றது. இவ் நிகழ்வை லன்டன் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்ப்பாடு செய்திருந்தார்கள் .

லன்டன் புலம்பெயர்ந்த உறவுகள் தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சு வரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர்லஞ்சலி செலுத்தினார்கள்.எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கபட்டுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழீழ விடுதலை வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

உறுதிப்படுத்தப்பட்ட மவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு , வீரவேங்கை இதயன் , வீரவேங்கை பிரியவதனா , வீரவேங்கை புலியரசன் , வீரவேங்கை புதியவன் , வீரவேங்கை தீப்பொறி , வீரவேங்கை அன்பரசன் / லோரன்ஸ் , வீரவேங்கை கவியரசி / அமலா , வீரவேங்கை முகிலன் , வீரவேங்கை நிறையிசை , வீரவேங்கை கரிகாலன் , வீரவேங்கை சுதாகரி , வீரவேங்கை இசைவாணன் , வீரவேங்கை பல்லவன் ஆகியோருக்கான வணக்க நிகழ்வு இடம்பெற்றது .நிகழ்வின் ஆரம்பமாக மாவீரன் கப்டன் அருந்ததியின் தாயாராகிய அசலாம்பிகை சண்முகநாதன் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்கள்.
தமிழீழ தேசிய கொடியினை முன்னை நாள் மன்னார் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சுரேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.தொடர்ந்து தமிழீழ தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இம் மாவீரர்களுக்கான பொதுப்படம் மற்றும் 15 மாவீரர்களுக்கான திரு உருவ படங்களுக்கும் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவீரர்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வானது இன்று 12.09.2021 ஞாயிறு பிற்பகல் 15.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு  18.00 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவேறியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.