செல்பியினால் மாயமான இளைஞன்

 


பதுரலிய, அத்வெல்தொட்ட நீர்வீழ்ச்சியின் செல்பி எடுப்பதற்காக முற்பட்ட இளைஞன் ஒருவன் கால் தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளார்.


நேற்று (10) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளதால் குறித்த இளைஞனை தேடும் பணிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.