வாக்குக்காக எந்த நிலையிலும் நடிப்பேன்: சுமந்திரன் திடசங்கட்பம்!

கடைசியில சுத்துமாத்து சுமந்திரனையும் போட்டோக்கு போஸ் குடுக்கும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் கூட இருக்கும் கைப்புள்ளைகள்.

5 வயதில் கொழும்பு சென்று சிங்கள மக்களுடன் சந்தோசமாக அங்கயே வாழ்ந்தவருக்கு மாட்டில் ஏர் பூட்டி உழ தெரியும் என மக்களை நம்ப வைக்க மேற்கொண்ட முயற்சி அபாரதம்.
ஆனாலும், இதுதான் எங்கள் வாழ்க்கை முறை கற்றுக்கொள்ளுங்கள் என மக்கள் அவருக்கு புரிய வைத்துள்ளார்கள். அந்த யதார்த்தத்தை அவரும் புரிந்து கொண்டு தொடர்ந்து செயல்பட்டால் நல்லது.👍
இன்றைய இந்த Photoshoot இன் பின் பல விடங்கள் மறைந்திருக்குது.
1) பாமர விவசாய மக்களின் வாக்கை பெற வேண்டும் என்பதற்காக தான் இன்று இந்த புதிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் Mr சுத்துமாத்து.
2) யாழ் தேர்தல் தொகுதியில் 95,000 வாக்குகளை கொண்டது கிளிநொச்சி தேர்தல் தொகுதி. அங்கு சிறீதரனை மீறி சுத்துமாத்து சுமந்தியால் எதுவுமே செய்ய முடியாத நிலை தான் இருக்கிறது. அங்கு வாக்குகளை பெற வேண்டும் என்றால் இப்படியான நடிப்புக்கள் மூலமே முடியும்.
3) வடக்கு கிழக்கில் கிளிநொச்சி தவிர்ந்த மற்ற மாவட்டங்களில் ஓரளவு தனது வால்புடிகளை நிலைநிறுத்திவிட்டார். ஆனால் கிளிநொச்சியில் சிறீதரனின் ஆளுமையை தான்டி இதுவரை எதுவுமே செய்ய முடியவில்லை. அதை சாத்தியப்படுத்த தான் இந்த கிளிநொச்சி வயல்விதைப்பு நடிப்பு எல்லாம்.
4) சிறுபோகத்தில் விழுந்த நெல் இந்த வயலுக்குள் விழுந்து அது முளைத்து இருக்கிறது. சீராக மட்டம் வெடித்து தான் இருக்குது பயிர், பிறகு ஏன் மீள் விதைப்பு?
5) இது முற்றுமுழுதாக ஒரு நடிப்பு விதைப்பே, ஏன் என்றால் டிசைன் போட்ட பானைல பொங்கி, ஏர் பூட்டி, புது சாறம் கட்டி, தலைப்பா கட்டி ஒரு Photoshoot நடாத்தி இருக்கிறார்.
ஒருவர் உண்மையாக விரும்பி விவசாயம் செய்ய முன்வந்தால் நாம் அதை வரவேற்கிறோம் ஆனால் நடிக்க கூடாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.