யாழ் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று  காலை 9 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது.


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் இவ் நிகழ்வு நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்தார்.


இந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுதப்பட்டு இன்று நிகழ்நிலைப் பட்டமளிப்பு நடைபெற்றது. அதன்படி இன்று காலை 9 மணிக்கு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.


இதேவேளை , நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழா நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் சுமார் ஆயிரத்து 700 பேரின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.