இந்த யுகவாழ்வில் மனம் நிறைவு காண!


 வெறும் காற்றை நுகர்ந்தபடி

மாழ்பழத் தெருவோரமாக நின்று
கானமிசைக்கும் நானோ ஒரு தெருப்பாடகி ..
பாடல்களின் மீது மையல்கொண்டு
பாதை மாறிய மந்தை கூட்டமாக
இடம் மாறி அலைந்துகொண்டிருக்கிறேன்..

நானோ அதிகம் படித்த நவநாகரிக மங்கையல்ல
என் கானத்தினை கேட்க வருபவர்களிற்காகவே சீவி சிங்காரித்து
கண்ணாடி வளையல்களை அணிந்துகொள்கிறேன் ..

பசி கொண்ட பட்சியைப்போல
தீராத தேடல்கள் நிறைந்தவளை
கொண்டாடித் தீர்க்காதீர்கள் ..

கட்டுமரம் அலையாடிச் செல்வதைப்போல
பல்லாயிரம் முகம்களின் மத்தியிலும்
நானோ இசைபாடியபடி அலைகிறேன்
என் மனம் தொட்ட முகத்தினை
தேடியபடி ..

சாலையோரத்து நீர்த்திவலையாக
மனதின் ஆழத்தில் கிடக்கும் வரிகளைக்கொண்டு பாடல் ஒன்று
இயற்றி
செந்தமிழ் வரிகளில் படிக்க வேண்டும் ..
இந்த யுகவாழ்வில் மனம் நிறைவு காண
என் குரலில் அவை ஒலிக்க
பாட்டோடு என்நாளும் நீங்காமல்
நான் வாழ வேண்டும் ..

காலம் நூறு ஆனாலும்
என் மனம் தேடும் உறவின் செவியிரண்டும்
எந்தன் இராகமதை மனம் குளிர
என்றாவது ஒரு நாள் கேட்டிடவேண்டும்.


-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.