சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் 47 வது நினைவு தினம்!

p>சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் 47 வது நினைவு தினமானது சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினாலும், அவரது குடும்பத்தினராலும் இன்று களுவாஞ்சிக்குடியில் அவருடைய உருவச்சிலைக்கு முன்பாக நினைவுகூறப்பட்டது. இந்த நிகழ்வானது சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வருடா வருடம் நடைபெற்று வருகின்றது. 

 

இந்த வருடம் இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வட்டார பிரதிநிதிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் களுவாஞ்சிக்குடி வட்டார பிரதேச சபை உறுப்பினரும், சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பிரதேச மட்ட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

 

 இந் நிகழ்வானது சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளர் மதிமேனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி 15 பேருக்குள் மட்டுப்படுத்தி இந் நிகழ்வினை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தமையினால் இந் நிகழ்வு 15 பேருக்குள் மட்டுப்படுத்தப்பட்டது. 

சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறுவர் இல்லங்களுக்கும் மதிய நேர உணவளிக்கப்பட்டது இன்னும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.