நண்பியின் ATM அட்டையை திருடிச்சென்ற பெண் கைது!!

 


அனுராதபுரத்தில் பெண் ஒருவரின் ஏ.ரி.எம் அட்டையை திருடி மற்றொரு பெண் பணத்தை திருடிய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

அனுராதபுரம் தம்புத்தேகமவில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் இரு பெண்கள் பணியாற்றி வந்த நிலையில் இருவரும் குறுகிய காலத்தில் நணபர்களாக மாறினர். பின்னர் இருவரும் அவர்களின் தனிப்பட்ட தகவலைகளைப் பரிமாறும் வகையில் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று நண்பி வெளியே சென்ற வேளை அவர் கைபையிலிருந்து மற்றொரு பெண் ஏ.ரி.எம் அட்டை திருடி சென்றுள்ளார். குறித்த அட்டை பயன்படுத்தி தானியக்கி இயந்திரத்திலிருந்து 36000 பணத்தை திருடியுள்ளார்.

இதேவேளை வெளியேறிய பெண் திருப்பி வந்து பார்த்தபோது தனது கை பையில் இருந்த ஏ.ரி.எம் அட்டை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் தனியார் ஆடை தொழிற்சாலையில் இருந்த சி.சி.ரிவி கமராவை பரிசோதனை செய்துள்ளார். இதன்போது குறித்த பெண்ணுடன் நெருங்கி பழகிய மற்றொரு பெண்ணே கை பையில் இருந்த ஏ.ரி.எம் அட்டை திருட்டி சென்றது தெரியவந்துள்ளது.

திருட்டியில் ஈடுபட்ட பெண்ணை பொலிஸார் கைது செய்ததுடன்  தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.