இலங்கை வந்த அமெரிக்க பிரமுகர்!!

 


அமெரிக்காவின் போட்டிரஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இலங்கைக்கு இன்று அதிகாலை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் சார்ந்த மற்றுமொரு ஒப்பந்தத்தை செய்ய அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த ஒப்பந்தம் பற்றி மக்களுக்கு அரசாங்கம் தெளிவு படுத்தவில்லை. அதனிடையே மற்றுமொரு ஒப்பந்தம் செய்துகொள்ள தயாராகி வருகிறதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க உறுப்பினர் ரஞ்சன் ஜயலால் கூறியுள்ளார்.

அதோடு , இன்று நண்பகலுக்குமுன் அரசாங்கம் தெளிவு படுத்தாமல் இருந்தால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதாகவும் ரஞ்சன் ஜயலால் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.