பேருந்தில் ஏறி ரவுடிகள் குழு அட்டகாசம் - சாவகச்சேரியில் சம்பவம்!!

 


யாழில் சமீப காலமாக மர்ம நபர்களில் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பொலிஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் மேலும் மேலும் தாக்குதல் மேற்கொண்டுதான் வருகின்றனர்.

 இ.போ.ச பேருந்தில் ஏறி மர்மநபர்கள் நடத்திய தாக்குதல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று  (14) யாழ்.சாவகச்சேரி பகுதியில் சென்ற பேருந்தில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

இது குறித்து மேலும்  தெரியவருவது,

யாழ்.சாவகச்சேரியில் இருந்து சுன்னாகம் நோக்கி சென்றுகொண்டிருந்த 775 வழி இலக்க பேருத்தில் ஏறிய 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பேருந்தின் நடத்துனரிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ரவடி கும்பலை பேருந்தில் இருந்து இறக்குமாறு சாரதியும் கூறியுள்ளார். அதை கேட்காத ரவடிகள் தொடர்ந்து பேருந்து நடத்துனருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுவந்ததுடன் நடத்துனரை தாக்கியுள்ளனர்.

இதனை அவதானித்த வயோதிபர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வயோதிபர் என்றும் பாராமல் அவர் மீதும் சரமாரியாக தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த முதியவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.