யார் யாருன்னு பாருங்க!


 பிக் பாஸ் என்றாலே விமர்சனங்களும் சர்ச்சைகளும்தான். ஏற்கெனவே நன்கு பரீட்சையமான பிரபலங்கள் என்றால், ஓரளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும், அதனால் தொடர்ந்து அவர்களின் வெவ்வேறு செயல்பாடுகளைப் பின்பற்றுவோம். ஆனால், இம்முறை அதுபோன்ற முகங்கள் அவ்வளவாக இல்லை என்பது ஏமாற்றமாக இருந்தாலும், போகப்போக சுவாரஸ்யம் கூடிக்கொண்டேதான் போகிறது.

அந்த வரிசையில் இந்த 3 நாள்கள் பின்பற்றியதில், மக்கள் மனதில் இந்தப் போட்டியாளர்கள் எவ்வாறு கணிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போமா…

அழகிகள்!

வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் மாடல்களில் வரவு இருக்கும். அதிலும் இம்முறை ஐந்து மாடல்கள். சொல்லவா வேண்டும்! தேவதை தோட்டம் போலக் காட்சியளிக்கிறது வீடு. அந்த வரிசையில் மக்கள் மனதில் அழகிகளாக வளம் வருபவர்கள் பட்டியலில் அக்ஷரா, பாவனி ரெட்டி, சுருதி, நடியா சங் மற்றும் நமிதா ஆகியோர் இருக்கின்றனர்.

பார்ப்பதற்கு அமலா போல இருக்கிறார் என்று சக போட்டியாளரான ராஜு கொளுத்திப் போட, மக்களும் அவரை இப்போது ஜூனியர் அமலா என்றே செல்லமாக அழைக்கின்றனர். விரைவில் அக்ஷராவிற்கு ஆர்மி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவரைத் தொடர்ந்து ஏற்கெனவே பலருக்கும் நன்கு தெரிந்த பாவனி. மொழியில் கொஞ்சம் பிரச்சனை இருந்தாலும், நிச்சயம் இவர் இறுதி வரை பயணிப்பார் என்கிற விவாதம் ஒரு பி அக்கம் போய்க்கொண்டிருக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து மாடலிங் உலகில் கலக்கிக்கொண்டிருக்கும் நடியா, சுருதி மற்றும் நமிதா ஆகியோரையும் தங்களின் கனவு கன்னிகள் வரிசையில் பொறுத்தியுள்ளனர்.

ஆணழகன்கள்

அழகிகள் மட்டும் தான் இருக்கக்கூடுமா. அழகங்களும் உண்டு என்பதுபோல, சிபி, நிரூப், வருண் மற்றும் அபிநய் என நான்கு ஹீரோக்களை களமிறங்கியுள்ளது பிக் பாஸ். என்னதான் சிபி மற்றும் அபிநய்க்கு திருமணம் ஆகியிருந்தாலும், இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகிறது. என்ன உயரம், என்ன பாடி என்றபடி நிரூப்பின் இன்ஸ்டா பக்கத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறதாம். திரைப்படத்தில்  மட்டுமல்ல, உண்மையிலும் தான் ஒரு ஹீரோதான் என்கிற ரேஞ்சில் சாந்தமாக சுற்றித்திரிக்கிறார் வருண்.

சுவாரஸ்யமற்ற போட்டியாளர்கள்

என்னதான் திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் சேர்க்க முடியாது என்று மக்கள் நினைக்கும் கேட்டகிரியில் சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெரி, மதுமிதா மற்றும் இசைவாணி இருக்கின்றனர்.

என்னதான் நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் சின்னப்பொண்ணு கில்லாடி என்றாலும், மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போலவே இருக்கிறார். தொடக்கத்தில் தாமரை செல்வி கன்டென்ட் கொடுக்க மாட்டார் என்று நினைத்தாலும், கடந்த 2 நாள்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருடனும் மிங்கில் ஆகிறார். ஐக்கி பெரி வீட்டினுள் எங்கு இருந்தாலும் பளீச்சென்று தெரிந்தாலும், அமைதியாகவே இருக்கிறார். மதுமிதா யார் என்பது இப்போதே நினைவில் இல்லை. இசைவாணி பாடுவதைத் தவிர வேறெதுவும் சுவாரசியமாக எதுவும் செய்யவில்லை என்பது மக்களின் நிலைப்பாடாக உள்ளது. வரும் நாட்களில் இவர்கள் கூடுதல் கன்டென்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எரிச்சலூட்டும் போட்டியாளர்கள்

இவர்களெல்லாம் வாயைத் திறந்தாலே கடுப்பா இருக்கு என்று மக்கள் குமுறும் போட்டியாளர்கள் பட்டியலில் பிரியங்கா, ராஜு, அபிஷேக் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளனர். பிரியங்கா பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர் வாயைத் திறக்கவில்லை என்றால்தான் அதிசயம். அதிலும் பேசுவது எல்லாம் ரெஸ்ட்ரூம் சம்பந்தமான பேச்சுகளாக இருப்பது, மேலும் எரிச்சலைக் கிளப்புகிறது.

ராஜு அவ்வப்போது நல்ல நல்ல காமெடி சொன்னாலும், சில நேரங்களில் கொஞ்சம் ஓவராகத்தான் பேசிவிடுகிறார். அதை மட்டும் குறைத்துக்கொண்டால் இறுதி வரை ராஜு பயணிப்பார். அபிஷேக் ராஜா பற்றிப் பேசாத நாள்களே இல்லை எனலாம். அவர் நகர்த்தும் ஒவ்வொரு அடியும், கன்டென்ட்டுக்கான அடித்தளமாகவே உள்ளது. உண்மை என்பது சிறிதளவும் இல்லை என்பது கடுப்பு. இமான் அண்ணாச்சி இன்னும் கொஞ்சம் அனைவரோடும் கலந்து, கலகலப்பாகப் பேசினால் நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.