ஃபேஸ்புக் பெயர்விரைவில் மாற்றம்!!
ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க் (Mark Zuckerberg) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களையும் தன்வசம் வைத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் ஒரு செயலியில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓகலஸ் உள்ளிட்டவைகள் கிடைக்கக் கூடும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த மாநாட்டில் வைத்து ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை மார்க் ஸக்கர்பேர்க் (Mark Zuckerberg) வெளியிட திட்டமிட்டுள்ளதாக தி வெர்ஜ் என்ற சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை