ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளின் சாதனை!!

 




இந்தியாவின் கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு இளம் பெண்கள், பிரிட்டனில் பிரபல மருத்துவமனையில் செவிலியர்களாக பணியில் சேர்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த Joby என்ற செவிலியர், தன் கணவர் Shibu Mathew-உடன் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில் இத்தம்பதிக்கு , ஒரே பிரசவத்தில் பிறந்த தங்கள் நான்கு குழந்தைகளையும் உறவினரிடம் விட்டுவிட்டு கணன் மனைவி இருவரும் பிரிட்டனுக்கு சென்றுள்ளனர்.

அதன்பின்னர், ஒரு வருடம் கழித்து நான்கு குழந்தைகளும் பிரிட்டனுக்கு பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார்கள். Joby செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா மற்றும் ஓமன் நாடுகளில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார்.

அதோடு அவர் தனது குழந்தைகளையும் கவனித்துக் கொண்டே, 2014 ஆம் வருடத்திலிருந்து 2017 ஆம் வருடம் வரை பிரிட்டன் நாட்டிலேயே செவிலியர் பட்டபடிப்பை முடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது, Ipswich என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல், Aneetta, Anjel, Aleena, மற்றும் Aneesha என்ற அவர்களின் 4 பிள்ளைகளும் Suffolk பல்கலைகழகத்தில் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு, கேம்பிரிட்ஜில் இருக்கும் Royal Papworth செவிலியர் பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.

இது தொடர்பில் தந்தை, Shibu Mathew கூறுகையில், "எனக்கு தெரிந்து, NHS-ல் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் பணியாற்றுவது, எங்கள் குழந்தைகளாகத்தான் இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.