கத்தார் உலகத்தரத்தில் முதலிடத்தைப் பிடித்தது!!

 


நடப்பு ஆண்டிற்கான உலக அளவில் சிறந்து விளங்கும் விமான நிலையங்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய மதீப்பிடு நிறுவனமான skyratx வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 8 வருடங்களாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் விமான நிலையம் தற்போது பின் சென்ற நிலையில் முதல் இடத்தில் கத்தாரின் Doha’s Hamad International Airport உள்ளது.

விமான நிலையத்தில் இருக்கும் செக்கிங், குடிவரவு, பாதுகாப்பு, தூய்மை, உணவகங்கள், பார்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

 இந்தப் பட்டியலில் நூறு விமான நிலையங்கள் உள்ள நிலையில் முதல் 10 இடங்களில் 7 விமான நிலையங்கள் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவையாகும்.

இதேவேளை குறிப்பாக வடஅமெரிக்க விமான நிலையங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த ஆண்டும் பட்டியலில் முதல் 20 இடங்களில் ஐரோப்பாவை சேர்ந்த விமான நிலையங்கள் அதிக அளவில் உள்ளன.

முதல் 10 இடங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மூன்று விமான நிலையங்கள் உள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையம் முதல் 5 இடத்தில் இருந்த நிலையில் தற்போது அது 22வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு 13 வது இடத்தில் இருந்த வான்கூவர் சர்வதேச விமான நிலையம் தற்பொழுது 24 வது இடத்திற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.