ஓட்ஸ் லட்டு!!

 


தேவையான பொருட்கள்:


1. ஓட்ஸ் - 1 கப்

2. பொடித்த வெல்லம் - 1/2 கப்

3. நெய் - தேவையான அளவு

4. முந்திரிப்பருப்பு -10 

5. உலர் திராட்சை - 20

6. பாதாம் - 5 

7. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

1. ஓட்ஸை நன்றாக வறுத்து, அதை ஆற வைத்துப் பொடித்து வைக்கவும்.

2. அதனுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்க்கவும்.

3. முந்திரிப் பருப்பு மற்றும் பாதாமை தனித்தனியாக வறுத்துப் பொடியாக நறுக்கிப் பொடித்து வைக்கவும்.

4. ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், வெல்லம், ஏலக்காய்ப் பொடி, முந்திரி, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.

5. ஒரு தேக்கரண்டி நெய்யைச் சூடாக்கி, உலர் திராட்சையை அதில் சேர்த்து வறுக்கவும்.

6. பின்னர் அதில் ஓட்ஸ் கலவையைச் சேர்க்கவும்.

7. நெய்யை உருக்கி, அதில் இந்தக் கலவையைக் சேர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக கலக்கவும்.

8. நன்றாகக் கலக்கிவிட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.