தகாத உறவு - பொலிஸ் அதிகாரி மீது விசாரணை ஆரம்பம்!!


 மொனராகலை பகுதியில் கடமையாற்றும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தவறான உறவு தொடர்பில்   பெண்ணின் கணவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தனது மனைவியுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இரகசிய உறவு வைத்திருப்பதாக குடும்பஸ்தர் ஒருவர் முறையிட்டதை அடுத்தே , இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குடும்பஸ்தர் தனது வீட்டுக்குள் தீடீரென நுழைந்த போது, அவரது மனைவியுடன் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கையடக்க தொலைபேசி, வெள்ளை நிற தலைக்கவசத்தையும் வீட்டில் விட்டுச்சென்ற நிலையில், அவை “சான்று பொருளாக“ கணவரால் பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மொனராகலை வலயத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி, தனது பகுதியலுள்ள இளம் குடும்பப் பெண்ணொருவருடன் அறிமுகமாகி, தொலைபேசி இலக்கங்களை பரிமாறி கொண்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து இருவரும் நேரில் சந்தித்து உல்லாசமாக இருக்க ஆரம்பிக்க, அந்த தகவல் கணவருக்கும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதனை உருதி செய்ய விரும்பிய கணவர், திடீர் வேலை காரணமாக அன்று மாலை தூர இடமொன்றிற்கு செல்வதாகவும், அன்றிரவு வர மாட்டேன், கவனமாக இருந்து கொள்ளும்படி மனைவியிடம் கூறி சென்றுள்ளார்.

கணவர் வீட்டில் இல்லையென்பதால், அன்றிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் பொறுப்பதிகாரி அந்த வீட்டிற்கு சென்று காதலியையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தார்.

இதேவேளை வீட்டை விட்டு வெளியேறிய கணவன், அயலவர்களின் உதவியுடன், வீட்டிற்கு அருகிலேயே தங்கியிருந்த நிலையில், பொலிஸ் அதிகாரி நுழைந்த சிறிது நேரத்தின் பின் கணவனும் வீட்டுக்கள் நுழைந்தார்.

கணவர் திடீரென நுழைந்ததும், பொலிஸ் பொறுப்பதிகாரி அறையை விட்டு தப்பியோடி, மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். பொலிஸ் பொறுப்பதிகாரியை விரட்டிச் சென்று வீடு வந்த கணவர் , அவரது வெள்ளை தலைக்கவசம், கையடக்க தொலைபேசி வீட்டிலிருந்ததை அவதானித்தார்.

அவற்றையும், தனது மனைவியினது கையடக்க தொலைபேசியையும் எடுத்து மறுநாள் மொனராகலை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணை இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.