மாகாண சபை தேர்தல்- ஆளும் கூட்டணியின் எதிர்ப்பு கோஷம்!!
இந்தியாவின் அழுத்தத்திற்கு அச்சப்பட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த கூடாது என சிறு காட்சிகள் பலவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளனர்.
மாகாண சபை தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் ஆளும் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இதில் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து தேர்தலை நடத்த கூடாது என ஆளும் கூட்டணியின் பின் வரிசை உறுப்பினர்கள் மற்றும் சிறு காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியாவிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என கூறி அரசாங்கம் ஆளும் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு பதிலளித்து வருகின்றது. இதன் மூலம் தேர்தல் நடத்துவதில் உள்ள சட்டசிக்கல்களை சீர் செய்து எதிர்வரும் வருடத்தின் முதல் மாதத்தில் தேர்தல் முறைமை தொடர்பிலான பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரனையைமூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிறைவேற்ற வேண்டிய காட்டாயம் உள்ள சூழலில் அதற்கு ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவிப்போர் ஆதரவளிப்பார்களா என அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உயர் அரசியல் மட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன வெளிப்படையாகவே மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன.
ஆனால் ஆளும்கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட இந்த மாகாண சபை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியா அழுத்தத்தை உள்நோக்கியும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை