ரஜினிக்குப் புகழாரம் சூட்டிய சச்சின்!
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. கடந்த 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி மற்றும் இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதினை வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஒவ்வொரு முறையும் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால், தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை