டிவிஎஸ் கம்பெனி ஸ்கூட்டி விற்பனையில் புதிய சாதனை!!
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பைக் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் டிவிஸ் மோட்டார் கம்பெனி, ஆண்டுக்கு 30 லட்சம் வாகனங்களை விற்பனை செய்கிறது. பைக், ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, 60க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனம் வாகன உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் பல்வேறு மைல்கல்களை எட்டியுள்ளது. தற்போது புதிய சாதனையாக ஸ்கூட்டி உற்பத்தியில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
அதாவது ஸ்கூட்டி விற்பனையில் 5 மில்லியன் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனம் இன்று (அக்டோபர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஸ்கூட்டி ரகத்தைச் சேர்ந்த இருசக்கர வாகனங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்குப் பிடித்தமான வாகனங்களாக இருப்பதாகவும், அவர்களின் பயணத்துக்கு ஏதுவாக ஸ்கூட்டி இருப்பதாகவும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்கள் வண்டி ஓட்டும்போது கால்களை ஊன்றுவதற்கு வசதியாக, மேடு பள்ளங்களில் தங்கு தடையின்றி ஓடுவதால் ஸ்கூட்டி வாகனம் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதாகக் கூறும் டிவிஎஸ் நிறுவனம், பெண்களுக்கான இரு சக்கர வாகனம் என்றாலே அது டிவிஎஸ் ஸ்கூட்டிதான் என்று நினனவுக்கு வரும் அளவுக்கு இது பிரபலமாக இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
டிவிஎஸ் ஸ்கூட்டி வாகனத்தில் டிவிஎஸ் மோட்டாரின் காப்புரிமம் பெற்ற ‘ஈஸி ஸ்டாண்ட் தொழில்நுட்பம்’ பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை நிறுத்தி சென்டர்
ஸ்டாண்ட் போடும் போது, வாடிக்கையாளர்கள் வாகனத்தைப் பின்னால் இழுப்பதில்
உள்ள சிரமத்தை 30 சதவீதம் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற பைக்குகளை விட கியா இல்லாத இந்த ஸ்கூட்டி வகை வாகனங்கள்தான் தற்போது வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்படுகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை