நாட்டின் சில பகுதிகளில் வானில் தோன்றிய மர்மப்பொருள்!!
வானிலிருந்து மர்ம பொருள் நாட்டின் சில பகுதிகளில் வந்துள்ளதாக நேரில் பார்த்த மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேற்று காலை தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிலந்தி கூடுகள் போன்ற பொருள் ஒன்று வானில் பறந்தது வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவற்றில் சில பகுதிகள் வானில் இருந்து தரையில் விழுந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், பிரதேச மக்கள் கருத்து வெளியிடுக்கையில்,
தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நூல் போன்ற ஒன்று வானில் இருந்து விழுந்ததாகவும் வெயில் பட்டவுடன் அவை மாயமாகி தரையில் விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் வானம் முழுவதும் அவை படர்ந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேலும், சிறிது நேரத்தில் விமானம் ஒன்று அந்த பகுதிகளில் பறந்ததை அவதானித்தோம். அதில் புகை போன்று வெளியேறியது. எனினும், சற்று நேரத்தில் விமானம் மறைந்து விட்டது.
இதனால், சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் மற்றும் விமானப்படையினருக்கு தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேலும், அம்பாறை பிரதேசத்திலும் இதுபோன்று பறந்ததாகவும், அவை பஞ்சு மற்றும் நூல் போன்றே காணப்பட்டது.
புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அவை கமராவில் சரியாக தென்படவில்லை என பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை