திருமணம் / திருமண முறிவு சட்டத்தில் திருத்தம்!!

 


மலைநாட்டு திருமணம் / திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய 1997 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க திருமணப் பதிவு செய்தல் (திருத்தப்பட்ட சட்டம்) மூலம் திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரை திருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சிறுவயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் விருப்பு ஒப்புதல் அவசியமெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

குணரத்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்குத் தீர்ப்புக்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது. அவ்வாறான திருமணத்திற்கு பெற்றாரின் விருப்பு ஒப்புதல் இருத்தல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது.

குறித்த வழக்குத் தீர்ப்புக்கமைய தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்தவர் ஒருவருடைய உடன்பாட்டுடன் சிறுவயதுக்காரர்களின் திருமணத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களுக்கு ஏற்புடைய உறுப்புரைகளை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, தற்போது முஸ்லிம் திருமண மற்றும் திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.