ஜேர்மன் நகரை தாக்கிய பெரிய சூறாவளி
ஜேர்மனியில் திடீரென சூறாவளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் வடக்கில் உள்ள Kiel நகரையே பெரிய சூறாவளி தாக்கியுள்ளது. Kiel நகரில் உள்ள உலாப்படகு கிளபை சூறாவளி தாக்கியது போது, அங்கிருந்த மக்கள் பலர் சுழலில் சிக்கி கடலில் விழுந்து மூழ்கியுள்ளனர்.
எனினும், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், இதில் 3 பேருக்கு லேசான காயமும், 3 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி தாக்கியதை தொடர்ந்து நகரில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நகரில் இந்த சூறாவளியால் மொத்தம் 7 பேர் காயமடைந்ததாக, தற்போது பாதிக்கப்பட்ட 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக BILD செய்தித்தாள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், சூறாவளியில் சிக்கி எத்தனை மரங்கள் விழுந்தன, நகரில் ஏற்படுத்திய சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
அதேசமயம், பலத்த காற்றுடன் Kiel நகரை சூறாவளி தாக்கும் திகிலூட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
ஒரு வீடியோவில், சூறாவளி கரையை கடக்கும் போது சுழல் காற்றில் சிக்கி பெரிய மரம் ஒன்று விழுவதை காட்டுகிறது.
கருத்துகள் இல்லை