நம் நட்பின் நினைவுகளுக்கு..!!

 


பூட்டியிருக்கும் மனக்கதவை மெல்ல தட்டிக்கொண்டிருக்கிறது இளம்காற்று

காய்ந்து போயிருக்கும் றோசா இதழ்களில் இருந்து வரும் வாசனை
எந்தன் நட்பின் நினைவுகளை
புதுப்பித்துச் செல்கிறது
தூர்ந்து கிடக்கும் நிலத்தின்
பாசிகளின்மேல்
கூழாங்கல் ஒன்றினால்
என் தோழியவளின் பெயரினை எழுதுகிறேன்
இலந்தைப்பழம் பழுக்கும் பருவமொன்றில்
மணற்திட்டி ஒன்றின் மேலிருந்து
பல கதைகளோடு மகிழ்ந்திருந்ததும்
மகிழ்வாக உலாவந்த இடங்களும்
நம் நட்பின் நினைவுகளுக்கு சான்றாகிறது
சபிக்கப்பட்டவனின் கல்லறைமேல்
உதிர்ந்துகிடக்கும் இறகொன்றின் நிலையாக
அழுது தீர்த்த கண்ணீரில்
அழியாத காவியம் ஒன்று உருவெருக்க துடிக்கிறது
தூசுபடாமல் படிக்கும் புத்தகமாக
நமது நட்பின் நினைவுகள் இனிதானவை
விதி எனும் ரதத்தினிலே பயணப்பட்டு நீள்துயில் கொள்ளும் அவளின் நினைவுகளோடு
நினைவுச் சங்கிலியாக ஆறாமல் இன்னும்
வலித்துக்கொண்டிருக்கிறது மனக்காயங்கள்....
💕பிரபாஅன்பு💕

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.