21 இலங்கையர்கள் சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றமைக்காக கைது!
சட்டவிரோதமாக கனடாவுக்குச் செல்ல முயன்ற 21 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலநறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கடற்படையினர் தமக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து நேற்றுக் காலை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைதானவர்களில் 16 பேர் ஆண்கள், ஒருவர் பெண், நான்கு சிறுவர்கள் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடற்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை