கடைய விடமுண்டு விடுதலை ஒளிர்க்கானோ!!
கிளர்த்தும்
திவலையுமைச் சபிக்காதோ
நிர்மல நிலத்தில் புல்லர்கள்
முளைக்கின் திரிபுர எரிப்பாய்
சுடராதோ
கடலலை மீதில் பாற்கடல்
கடைய விடமுண்டு விடுதலை
ஒளிர்க்கானோ
மணி ஆறு பொங்க மனவானில்
துஞ்ச புலித்தோலுடுத்து
ஆடானோ
கதிரவன் கிழக்கில் வெள்ளிநிலா
சடையில் எம்மிருள் கிழிக்க
வெளிக்கானோ
சுடலையில் நின்று சடுகுடு ஆடி
இன்னொரு ராவணர்
கொடுக்கானோ
முன்பொரு முருகன் முப்பாட்டன்
குலசாமி ஆனவழி அருளி
இன்னொரு தீப்பொறி உதிர்க்காதோ
முருகனை ஈன்று முதல்வனைத் தந்து
முனிவிலா வாழ்தை
அருளானோ
அரகரா பாடி சரசமாய்க் கூடி
சாவினை உண்டு
எழுவோமே
சாம்பலைப் பூசி சந்திர சூடரில்
சஞ்சாரமாகி எம் நெஞ்சார
உன்னையே தொழுவோமே
இனி இருண்டிடும் வாழ்வில்
இன்னிசை ஒன்றினை சாமகானமாய்
பாடியே பூப்போமே
இன்னொரு முருகனை ஈன்றிட்ட
பொழுதினில் முத்தியின்பமே
கிடைத்தாய் உதிப்போமே
அதுவரை பாடியே ஆகாயம்
பறந்துமே கருமேகப்
பூவினை சூடுவோமே
நாளை மழைவரும் மழைவரும்
அது உந்தன் திவலையாய்
தெய்வ வாக்கினைப் பாடியே கடப்போமே
கருத்துகள் இல்லை