அம்பாறையில் திடீர் சோதனை நடவடிக்கை!!

 


அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.


இன்று (19) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது , குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள், முகக்கவசம் அணியாது சென்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையானது கொரோனா அனர்த்தத்தின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 100 பேரிடம மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-நிருபர் ஷிஹான்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.